Total Pageviews

Monday, 13 February 2017

My New WEBSITE AND FACEBOOK PAGE PLEASE VISIT THIS

WEBSITE : https://youarethelightofworld.wordpress.com/

FACEBOOK PAGE : https://www.facebook.com/youarethelightofworld/

Friday, 10 February 2017

முஸ்லீம் நண்பர்களே

நண்பரே ஒன்று குறி கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களது குரான் முழுமை பெற்றுள்ளதா ஹதிஸ் ஆராய்ச்சி நடைபேச்சு கொண்டிருக்கிறது ௨. இஸ்மாய்லின் வழி தோன்றல் தன முஹமத்த் அவர்களா௩. குரானில் எதாவது நிரூபணம் இருக்க்கா , இயேசு கிறிஸ்துவின் வாழ்கை சீராக பைபிளை குறுகிறது , ஆனால் குரான் ஏதும் அப்படி கூறவில்லையே , இயேசு எவ்வாறு பிறந்தார் அவரது பரம்பரை மத்தேயு ஒன்றாவது அதிகாரத்தில் தெளிவாக கூறியுள்ளது ஆனால் குரான் ஏதும் கூறவில்லை ,பைபிளை நீங்கள் ஆபாச புத்தகம் என்றால் பால் குடி ஹதீஸ் என்ன செய்விர்கள் உங்களுக்கு வேணும் என்ற ஹதீஸ் ஆஹ் எடுப்பீர்களா மனிதன் எடுக்கும் வேண்டு வெறுப்புகள் ஏன் கடவுளின் வார்த்தையாக இருக்க வேணும் .முஹமத்த் அவர்கள் கி. பி 1400 வாழ்ந்தவர் பைபிள் அப்போது அனைவர் கைகளிலும் இருந்தது ஏன் என்றால் இயேசு ஏசாயா புத்தகத்தை வாசிப்பதை காண்கிறோம் பைபிள் திருத்தப்பட்டது என்றால் அப்பொழுதே அப்பொழுது இயேசு சொல்லிருக்கவேண்டும் இரண்டாவதாக இயேசு போனபிறகு திருத்தப்பட்டது என்றால் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளில் கண்டிப்பாக பழைய ஏற்பாடு இருக்கவேண்டும் அப்படி என்றால் அனைத்து வேதகமத்தையும் திருத்தியுள்ளார்களா.உலகில் உ ள்ள அணைத்து வேதங்களையும் திருத்த முடியுமா ஒன்று கூடவா என்னும் கிறிஸ்தவர்கள் கிட்ட இல்ல . இன்று வரை அந்தவேதம் நம்மிடம் இல்லையா யூதர்களும் கிறிஸ்துவர்களும் வேறு நீங்கள் முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும் இயேசுவை சிலுவையில் அறைந்ததே யூதர்களால் தான் அப்படி அவர்கள் திருத்திருத்தலும் யூதனை பற்றி பெருமையாக கூறும்படி சொல்லிருப்பார்கள் அப்படி ஒன்னும் பைபிள் கூறவில்லையே.. கிறிஸ்த்தவர்களே ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கொண்டு போனதாக பைபிள் கூறுகிறது ஆனால் குரான் இஸ்மாயீலை கூறுகிறது பைபிள் வசனத்தோடு ஏதாகிலும் கூட்டினால் பொய்யன் என வசனம் கூறுகிறது. குரான் வசனத்தை கூட்டுகிறது ..........கடைசி காலத்தில் சர்ப்பம் வஞ்சிப்பது போல சாத்தான் நம்மை வஞ்சிப்பண் என பைபிள் கூறுகிறது சர்ப்பம் தேவனோடு கூட இருந்த ஏவலை இக்கனியை தின்றால் தேவனை போல் ஆவாய் என குறி வாஞ்சித்தது அவர்கள்அப்போது கூட தேவ சாயலில்த்தான் படைக்க பட்டிருந்தர்கள் ஆனால் வஞ்சித்தது அதுபோலதான் தேவனை அடைய இதுதான் வலி எப்படி தான் சேவிக்க வேணும் என குரான் ஹதீஸ் குறி நம்மை வஞ்சிக்கும் குரானை நம்பாதீர்கள் முஸ்லீம் நண்பர்களே நீங்கலே போய் உங்கள் மத குருக்களிடம் ஏன் ஹதீஸ் இல்லாமல் குரான் தனித்து பேசினால் முரணானதா என கேட்டு பாருங்கள் pls visit Christians this http://christianvsislam.blogspot.in/

Tuesday, 12 January 2016

கேள்வி: பதில்: இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?

கேள்வி:

கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?


பதில்:

என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.
“நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று இயேசு ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?

அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?
மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்" சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து "நான் தான் இறைவன்" என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் "எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு "பைத்தியக்காரர்" பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே "இயேசு இறைவன்" என்பதை நிருபிக்க போதுமானதாகும்.
நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் "வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்" என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.
உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது:

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” (யோவான் 11:25). என்று கூறினார்.

இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்:

“இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.” (யோவான் 11:43,44).
நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்:

1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரம் உடையவராகவே பேசினார்.

2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.

3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.
தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)
இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.

எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக "எழுத்தின் படியான நேரடியான கட்டளை" தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், "நான் தான் இறைவன்" என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு "நான் இறைவன்" என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.

இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.

யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.

உங்களின் வாதம்:
"நான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்ல வில்லையே என்பதாகும்.
இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள்

Thursday, 23 October 2014

நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ கேள்விகளும் ப‌தில்க‌ளும்

நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ கேள்விகளும் ப‌தில்க‌ளும்
1.யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்?இறைவ‌னின் பெய‌ரில்
2.தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்?இறைவனின்
3.தூதர்களை அனுப்புவது யார்?இறைவன்
4.தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்?இறைவனுக்கு
5.இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்?இறைவனின்
6.சொர்க்கத்தில் இருப்பவர் யார்? அங்கிலிருந்து வருபவரும் யார்?இறைவன்
7.சொர்க்கத்தில் இருப்பவர் யார்?இறைவன்
8.நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்?இறைவனிடம்
9.யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது?இறைவன் மூலமாக‌
10.நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்?இறைவன்
11.கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்?இறைவன்
12.நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்?இறைவன்
13.யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை?இறைவனின்
14.நித்திய வாழ்வை தருபவர் யார்?இறைவன்
15.நித்திய வாழ்வு யார்?இறைவன்
16.நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்?இறைவன்
17.நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்?இறைவனிடம்
18.யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு?இறைவனிடம்
19.உலகத்தில் ஒளி யார்?இறைவன்
20.பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்?இறைவன்
21.பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு?இறைவனுக்கு
22.நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்?இறைவன்
23.உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்?இறைவன்
24.ஆண்டவர் யார்?இறைவன்
25.நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்?இறைவன்
26.யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்?இறைவ‌ன்
27.யார் உண்மையாக‌ இருக்கிறார்?இறைவ‌ன்
28.ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்?இறைவன்
29.யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது?இறைவனின்
30.மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்?இறைவன்
31.மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர் யார்?இறைவன்
32.மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்?இறைவன்
33.மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்?இறைவன்
34.ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்?இறைவ‌ன்
35.உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்?இறைவன்
36.தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்?இறைவன்
மேலே சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் இறைவன் என்பதற்கான குணங்கள் அல்லது இறைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? மொத்தமாக இல்லையானாலும் மேலே சொல்லப்பட்டவைகளில் பெரும்பான்மையான குணங்கள் இறைவனுக்கு இருக்கவேண்டியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆம், ஒப்புக்கொள்கிறோம் என்றுச் சொல்பவர்கள், இந்த வசனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
1. யாருடைய‌ பெய‌ரில் ம‌க்கள் அனைவ‌ரும் தொழுதுக்கொள்ள‌ கூடி வ‌ருகிறார்க‌ள்? ... இயேசுவின் பெய‌ரில்
இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" மத்தேயு 18:20
2. தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய பிரசன்னம் அங்கு இருக்கும்? ... இயேசுவின்
இயேசு கூறினார்: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…” அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20
3. தூதர்களை அனுப்புவது யார்? ... இயேசு
இயேசு கூறினார்: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; … மத்தேயு 13:41

இயேசு கூறினார்: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்… மத்தேயு 24:30 ,31
4. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? ... இயேசுவிற்கு
இயேசு கூறினார்: வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31
5. இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல் யாருடைய பிரசன்னம் இருக்கும்? ... இயேசுவின்
இயேசு கூறினார்: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்... மத்தேயு 28:20
6. சொர்க்கத்தில் இருப்பவர் யார், அங்கிலிருந்து வருபவரும் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13
7. சொர்க்கத்தில் இருப்பவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; …. யோவான் 6:51

இயேசு கூறினார்: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. : யோவான் 8:23

இயேசு கூறினார்: நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். யோவான் 16:28
8. நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? ... இயேசுவிடம்
இயேசு கூறினார்: …மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15

இயேசு கூறினார்: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,….. யோவான் 10:28
9. யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? ... இயேசு மூலமாக‌
இயேசு கூறினார்: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், … யோவான் 10:9
10. நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35
11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு எழுப்புவார்கள்? ... இயேசு
இயேசு கூறினார்: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், … கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவான் 6:40-44
12. நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: ஜீவ அப்பம் நானே. யோவான் 6:48
13. யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை ? ... இயேசுவின்
இயேசு கூறினார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 13:31
14. நித்திய வாழ்வை தருபவர் யார் ? ... இயேசு
இயேசு கூறினார்: என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6:57

இயேசு கூறினார்: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:51
15. நித்திய ஜீவன் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: நானே … ஜீவனுமாயிருக்கிறேன்; யோவான் 14:6
16. நாம் அவரது பணிக்காக‌ நம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? ... இயேசு
இயேசு கூறினார்: என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:39
17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? ... இயேசுவிடம்
இயேசு கூறினார்: தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37
18. யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? ... இயேசுவிடம்
இயேசு கூறினார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் யோவான் 7:38
19. உலகத்தில் ஒளி யார்? ... இயேசு
இயேசு கூறினார்: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5 , 8:12
20. பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் … ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:34, 36
21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? ... இயேசுவிற்கு
இயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும். மத்தேயு 9:6
22. நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:58
23. உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 11:25
24. ஆண்டவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13
25. நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? ... இயேசு
இயேசு கூறினார்: …ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். யோவான் 14:2
26. யார் ம‌க்க‌ளுக்கு வ‌ழியாக‌ இருக்கிறார்? ... இயேசு
இயேசு கூறினார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6
27. யார் உண்மையாக‌ இருக்கிறார்? ... இயேசு
இயேசு கூறினார்: நானே … சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6
28. ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) ம‌க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: நான் மெய்யான திராட்சச்செடி, …. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:1-4
29. யாருடைய‌ துணையில்லாம‌ல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? ... இயேசுவின்
இயேசு கூறினார்: … என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5
30. மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17, 18
31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்? ... இயேசு
இயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்….. வெளி 2:23
32. மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனை தருபவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: …… அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். வெளி 2:23
33. மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: …. அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 26:63,64
34. ஓய்வு நாளின் ஆண்ட‌வ‌ர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார். மத்தேயு 12:8
35. உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது …. மத்தேயு 19:28
36. தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? ... இயேசு
இயேசு கூறினார்: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மத்தேயு 25:31,32

இயேசு கூறினார்: ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36

இயேசு கூறினார்: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:22,23
இயேசு கூறினார்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். யோவான் 10:30

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:8 ,9

மனித வடிவில் வந்த இறைவன் தான் இயேசு என்று ஏன் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்? இந்த கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. இயேசு தானே இறைவன் என்பதை பலமுறை சொல்லியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் இயேசு மொழிந்த வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொள்கின்றனர். யார் யாரெல்லாம் இதனை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் இயேசுவையும் அவர் சொன்னைதையும் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தம். 

























taken from .http://www.answering-islam.org/

நோவாவின் வயது

பைபிளிலும் ம‌ற்றும் குர்‍ஆனிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ நோவாவின் க‌தையை ஒருவர் ப‌டித்தால், கீழ் க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ளை அவ‌ர் காண வேண்டி வரும்.
ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான். நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்‍ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்‍ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)
நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார், ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்‍ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.
சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது
  1. நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
  2. அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
  3. அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது
வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள "அவர்கள் மத்தியில்" என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள "அவருடைய சமூகத்தாரிடம்" என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்‍ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.
ஷேர் அலி அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
And WE, certainly, sent Noah to his people, and he remained among them a thousand years, short of fifty years. Then the deluge overtook them, while they were wrongdoers. Sher Ali
முஹம்மது சர்வார் அவர்களின் மொழியாக்கம்:
We sent Noah to his people and he lived with them for nine hundred and fifty years, then the flood engulfed them for their injustice. Muhammad Sarwar
ரஷித் கலிபா அவர்களின் மொழியாக்கம்:
We sent Noah to his people, and he stayed with them one thousand years, less fifty.Subsequently, they incurred the flood because of their transgressions. Rashad Khalifa
மாலிக் அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
We sent Noah to his people and he lived among them a thousand years less fifty. Thenbecause of their wrongdoings the flood overtook them. Malik
பிரீ மைன்ட்ஸ் குர்‍ஆன் மொழியாக்கம்:
And We had sent Noah to his people, so he stayed with them one thousand years less fifty calendar years. Then the flood took them while they were wicked. Free Minds
கரிபுல்லா அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
Indeed, We sent Noah to his nation, and he lived amongst them for a thousand years, less fifty (but they belied him), then the Flood seized them while they were harmdoers. Qaribullah
முஹம்மத் அஸத் அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
And, indeed, [in times long past] We sent forth Noah unto his people, and he dwelt among them a thousand years bar fifty; and then the floods overwhelmed them while they were still lost in evildoing: Muhammad Asad
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குர்‍ஆனின் இந்த தவறு, பெரு வெள்ளத்திற்குப் பிறகு நோவாவைப் பற்றி குர்‍ஆன் ஒன்றுமே சொல்லவில்லை என்பதிலிருந்து, இன்னும் நிரூபனமாகிறது. கப்பலை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடும் இடத்திலிருந்து நோவாவின் கதை குர்‍ஆனில் முடிந்துவிடுகிறது. ஆதியாகமத்தின் 9ம் அதிகாரத்தின் நிகழ்ச்சியாகிய‌ "நோவாவோடும் மற்றும் மனித வர்க்கத்தோடும் தேவன் செய்த உடன்படிக்கையைப் பற்றி" குர்‍ஆனில் ஒன்றுமே சொல்வதில்லை. குர்‍ஆனை பொருந்த மட்டில், ஆங்காங்கே நோவாவின் சந்ததிகள் என்று சொல்கிறது அதை விடுத்து, குர்‍ஆனில் நோவாவின் கதை பெரு வெள்ளத்தோடு முடிந்துவிடுகிறது.

இந்த குர்‍ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்.
ஆக, குர்‍ஆனின் காலவரிசை கீழ் கண்ட விதமாக உள்ளது.

            ?ஆண்டுகள்?                950 ஆண்டுகள்                  ?ஆண்டுகள்?
பி-----------------------------அ-------------------------------------வெ----------------------------ம

விளக்கம்:

பி: நோவாவின் பிறப்பு
அ: நோவாவை நபியாக அல்லாஹ்வின் ழைப்பு
வெ: வெள்ளம்
ம: நோவாவின் ரணம்
எது எப்படியாயினும், ஒன்று மட்டும் தெளிவு: முஹம்மது தவறுதலாக நோவாவின் முழு வயதை அவரது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே சம்மந்தப்படுத்தியுள்ளார்






.

மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம்

குர்‍ஆன் மோசேயின் கதையை மட்டுமல்ல, மோசே மற்றும் பார்வோனின் கதையை அனேக இடங்களில் சொல்கிறது. குர்‍ஆன் சொல்லும் இந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் பல முரண்பாடுகள் மற்றும் தவறுகளை இந்த பக்கங்களில் குறிப்பிட்டுள்ளோம். இந்த சிறிய கட்டுரையிலும், குர்‍ஆன் எப்படி பைபிளுக்கு முரண்படுகிறது என்பதை விவரமாக காண்போம். ஏன் இப்படி குர்‍ஆன் முரண்படுகிறது என்று பார்த்தால், குர்‍ஆனின் ஆசிரியர் பைபிளில் காணப்படும் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறித்து குழம்பியுள்ளார், ஆதலால், ஒரு கதையில் வரும் விவரங்களை இன்னொரு கதையில் நுழைத்துவிட்டுள்ளார்.
மோசே மற்றும் யாக்கோபு என்பவர்களாகிய இவ்விருவர் தங்கள் ஊரை விட்டு ஓடிப்போனார்கள் (யாக்கோபு தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி ஓடிப்போனார், மோசே ஒரு எகிப்தியனை கொன்று விட்டதினால் தன் உயிர் தப்ப ஓடிப்போனார்). மட்டுமல்ல, இவ்விருவரின் திருமணம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் அல்லது தங்கள் மனைவிகளை கண்ட விதமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். இவ்விருவர் வேறு நாட்டிலிருந்து வந்தார்கள், வாலிப்பபெண்கள் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் குடிக்க வைக்க வரும்போது, மற்றும் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது, இவ்விருவரும் உதவி செய்து கிணற்றிலிருந்து தண்ணீர் வார்த்து கொடுத்தார்கள். மோசே மற்றும் யாக்கோபின் கதையில் வரும் இந்த ஒற்றுமைகள் குர்‍ஆன் ஆக்கியோனின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை முதலில் பைபிளிலிருந்து படிப்போம், அதன் பிறகு குர்‍ஆனின் வசனங்களைக் காண்போம்.
பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள். அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள். அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான். (யாத்திராகமம் 2:15-22)
குர்‍ஆனின் படி மோசே தன் எதிர்கால மனைவியை எப்படி சந்தித்தார் என்பதை இப்போது காண்போம்:
இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர,பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள். ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; "என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்" என்று கூறினார். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார். அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்." அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை.இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்." (அதற்கு மூஸா) கூறினார் "இதுவே எனக்கும் உங்களுக்கிமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். ( குர்‍ஆன் 28:23-28)
மேற்கண்ட குர்‍ஆன் வசனங்கள், பைபிளில் சொல்லப்பட்ட அதே நிகழ்ச்சியைத் தான் குறிப்பிட்டு பேசுகிறது. ஆனால், அனேக முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் குர்‍ஆன் குறிப்பிடும் வசனங்களில் காணப்படும். இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன: முதலாவதாக, யாத்திராகம‌த்தில் நாம் பார்க்கும் போது, மோசே ஏழு வாலிப பெண்களை காண்கிறார், மற்றும் அந்த ஏழுபேரும் ஒரே மனிதனின் பெண் பிள்ளைகளாக இருந்தார்கள். ஆனால், குர்‍ஆனில் பார்க்கும் போது, அது வெளிப்படையாக "மோசே அங்கு சந்தித்தது இரண்டு பெண்களை" என்று கூறுகிறது, மற்றும் அவ்விருவரும் ஒரே மனிதனின் புதல்விகள் என்றும் கூறுகிறது. பைபிள் மற்றும் குர்‍ஆன் கூறும் நிகழ்ச்சிகளில், அந்த மனிதன், மோசேக்கு தன் மகள்களில் ஒரு மகளை திருமணத்திற்காக கொடுக்கிறார். ஆனால், குர்‍ஆனில் ஒரு வித்தியாசம் உள்ளது, அது என்னவென்றால், அந்த பெண்ணின் தந்தை, மோசேயிடம் "என் மகளை திருமணம் புரிய" எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கிறார். இந்த பணத்தை எப்படி கொடுப்பது என்று பார்த்தால், அந்த பெண்ணுக்காக மோசே 8 அல்லது 10 ஆண்டுகள் தன்னிடத்தில் உழைக்கவேண்டும் என்று ஒரு நிபந்தனையை போடுகிறார்.

இங்கு குறிப்பிடவேண்டிய விவரம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகள் பற்றி குர்‍ஆன் கூறுகிறது, அவைகள் அடுத்தடுத்த வரும் எண்களாக இருந்தாலும், 8 அல்லது 10 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. குர்‍ஆனின் நிகழ்ச்சிப்படி இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வருட எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்‍ஆனில் காணப்படும் இந்த விவரங்கள் எப்படி மற்றும் எங்கிருந்து வந்தது? அவைகள் பைபிளில் யாக்கோபின் கதையில் வருகிறது, அதாவது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார் என்ற விவரங்களிருந்து எடுத்து குர்‍ஆனின் ஆக்கியோன், மோசேயின் கதையில் குழப்பத்தில் நுழைத்துள்ளார். இப்போது யாக்கோபு எப்படி இரண்டு மனைவிகளை திருமணம் செய்தார் என்பதை பைபிளிலிருந்து காண்போம்.
யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள். அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான். அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான். அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான். அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான். அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான். அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான். (ஆதியாகமம் 29:1-30)
இது தான் அந்த இரண்டு பெண் பிள்ளைகளுடைய நிகழ்ச்சியாகும், மற்றும் யாக்கோபு தான் நேசித்த பெண்ணுக்காக இரண்டு தவனை முறையில் தன் மாமனாரிடம் வேலை செய்தார். "இல்லை.. நாங்கள் இதனை அங்கீகரிக்கமாட்டோம்", குர்‍ஆன் இப்படி யாக்கோபின் கதையில் வரும் சிலவற்றை காப்பி அடித்து மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துச் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், அடுத்த வசனத்தில் குர்‍ஆன் சொல்லும் விவரத்தை சிறிது படித்துப் பாருங்கள்.
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார். (குர்‍ஆன் 28:29)
மோசே தன் மனைவியை திருமணம் செய்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டு இருந்த அந்த காலக்கெடு முடிந்தபிறகு அவர் தன் குடும்பத்துடன் தன் மாமனாரை விட்டு பிராயணம் மேற்கொண்டார். ஏன் ? மோசே எந்த ஊருக்குப் போகிறார்? பைபிளின்படி நாம் பார்த்தால், மோசேயை தேவன் எரியும் முட்புதரிலிருந்து சந்தித்து பேசிய நிகழ்ச்சியானது, மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்யும் போது அல்ல, அதற்கு பதிலாக, அவர் தனது அனுதின வேலையாகிய ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும் போது நடந்த நிகழ்ச்சியாகும்.
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். (யாத்திராகமம் 3:1-4)
"மோசே தன் குடும்பத்தாருடன் பிரயாணம் செய்தார், அந்த வழியில் இறைவனை சந்தித்தார்" என்ற இந்த குறிப்பிட்ட விவரமானது, மூன்றாவதாக முஹம்மது செய்த தவறாகும். அதாவது பைபிளின் படி கூறப்பட்ட யாக்கோபின் நிகழ்ச்சியிலிருந்து சில விவரங்களை எடுத்து முஹம்மது மோசேயின் நிகழ்ச்சியோடு சேர்த்துள்ளார். யாக்கோபு தான் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் காலக்கெடு முடிந்தவுடன் சென்றார். இன்னும் சில ஆண்டுகள் அதிகபடியாகவும் அவர் தன் மாமனாருடன் இருந்துள்ளார் (ஆதியாகமம் 30:25 லிருந்து 31:55 வரை பார்க்கவும்). இதைத் தான் ஒரு மாதிரியான நிபந்தனையாக "எட்டு ஆண்டுகள்... பத்து ஆண்டுகள்" என்று குர்‍ஆன் ஸூரா 28:27ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாக்கோபு தன் மாமனாராகிய லாபானை விட்டு, தன் தாய் நாட்டிற்கு (ஊருக்கு) செல்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன:

(1) லாபான் யாக்கோபை அனேகமுறை ஏமாற்றினார் (ஆதியாகமம் 31:41) மற்றும்

(2) தன் சகோதரனாகிய ஏசாவுடன் ம‌றுபடியும் ஒற்றுமையடைய செல்கிறார் (ஆதியாகமம் 32,33). 


இந்த பயணத்தின் போது யாக்கோபு தேவனை சந்தித்தார் (ஆதியாகமம் 32:22 லிருந்து 30 வரை).
இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து புரியும் விவரம் என்னவென்றால், குர்‍ஆனின் ஆசிரியர் யாக்கோபின் மற்றும் மோசேயின் வாழ்க்கை வரலாறை சரியாக புரிந்துக்கொள்ளாமல் குழப்பமடைந்துள்ளார். குர்‍ஆன் ஆக்கியோன், யாக்கோபின் வாழ்வில் நடந்த அனேக விவரங்களை எடுத்து, தாமே சொந்தமாக மோசேயின் வாழ்க்கையோடு முடிச்சு போட்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அல்லது நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த குழப்படைந்த நபரே இறைவனாக இருப்பது தான் அல்லது இந்த குழப்பம் அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று முஸ்லிம்கள் நம்புவது தான். இதன் முடிவு? ஏற்கனவே குர்‍ஆனில் காணப்படும் அனேக பிழைகள் மற்றும் முரண்பாடுகளோடு சேர்ந்து, இந்த முரண்பாடும் ஒண்டிவிடுகிறது, இதன் மூலம் அறிவது என்ன? குர்‍ஆன் என்பது அறியாமையில் இருக்கும் மற்றும் தவறுகள் செய்யும் ஒரு சாதாரண மனிதனின் கைவேலை என்பது நிருபனமாவதாகும்.
தோரா அல்லது ஐந்தாகமங்களின் விவரங்களின் படி பார்க்கும் போது, குர்‍ஆன் சொல்லும் விவரங்கள் எப்படி முஹம்மதுவின் அறியாமையினாலும், குழப்பத்தினாலும் நிரம்பியுள்ளது என்பதை எளிதாக கண்டுக்கொள்ளலாம். இந்த குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால், முஹம்மது சுயமாக எபிரேய வேதத்தை பார்த்து படித்து தெரிந்துக்கொள்ள அவரால் முடியவில்லை ஆகையால், தன்னுடைய குறையுள்ள ஞானத்தோடு அங்கும் இங்கும் கேட்ட நிகழ்ச்சிகளை தன் சொந்த கதைகளோடு சேர்த்து குர்‍ஆனில் கூறியுள்ளார். குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற கற்பனை கட்டுக்கதையை இதுவரை கேட்காமல் இருக்கும் ஒரு சராசரி மனிதன், மேற்கண்ட விவரங்களைக் கண்டால், அவன் இப்படித்தான் நினைத்துக்கொள்வான், அதாவது இந்த விவரங்களை குர்‍ஆனில் சேர்த்தவர் கண்டிப்பாக இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி குழம்பிப்போய் இப்படி முரண்பட்டுள்ளார் என்று எண்ணுவான். குர்‍ஆனின் குழப்ப கதைகளுக்கு இந்த நிகழ்ச்சி மட்டும் ஒரு எடுத்துக்காட்டு என்று நினைத்துக்கொள்ளக்கூடாது. இது போல அனேக நிகழ்ச்சிகளை பைபிளிலிருந்து எடுத்து அதை புரிந்துக்கொள்ளாமல் குழம்பமடைந்து இப்படி முரண்பட்ட நிகழ்ச்சிகள் குர்‍ஆனில் ஏராளம் உண்டு. இவைகள் பற்றி அறிய "குர்‍ஆனின் சரித்திர பிழைகள்" என்ற தலைப்பில் உள்ள முரண்பாடுகளை படித்து தெரிந்துக்கொள்ளவும்.

மேலும், ஒருவேளை குர்‍ஆனில் சொல்லிய படியே தோராவில் இருந்தது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், இது எப்படி சாத்தியமாகும் என்பதை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்? இஸ்லாமியர்கள் "தோரா திருத்தப்பட்டது" என்று சொல்வது அவர்களுக்கு சுலபமான பதிலாக இருக்கும். ஆனால், எந்த ஒரு குற்றமும், அல்லது பரிசுத்த வார்த்தைகளை மாற்றி எழுதும் குற்றமும் வெறுமனே நடந்துவிடாது, அவைகளுக்கு பின்னே ஒரு மிகப்பெரிய காரணம் அல்லது நோக்கம் இருக்கும். இப்போது இஸ்லாமியர்கள் பதில் சொல்லுங்கள், ஒரு மனிதனுக்கு "இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்" என்ற வார்த்தைக‌ள் இருக்கும் இடத்தில் "ஏழு பெண்கள் இருக்கிறார்கள்" என்று மாற்றி எழுதவேண்டுமானால், இப்படி ஒருவன் மாற்றவேண்டியதின் அவசியம் என்ன? மட்டுமல்ல, இப்படி மாற்றுவது சுலபமானதும் அல்ல, உலகில் அந்த காலத்தில் தோராவின் எத்தனை பிரதிகள் இருந்தனவோ, அவைகள் அனைத்திலும் சென்று இந்த மாற்றம் செய்வது கூடாத காரியமாகும். இந்த "இரண்டு பெண்கள்" என்ற இடத்தில் "ஏழு பெண்கள்" என்று மாற்றுவதினால், மத ரீதியாக தத்துவ ரீதியாக எந்த முக்கியத்துவம் அடையப்போவதில்லை, இதனால் எந்த உபயோகமும் இல்லை. இப்படி எந்த ஒரு யூதனும், அல்லது கிறிஸ்தவனும் மாற்றப்போவதில்லை, அவனுக்கு இதில் விருப்பமும் இருக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை. பைபிள் மற்றும் குர்‍ஆனுக்கு இடையே காணப்பட்ட இந்த ஒரு வித்தியாசத்தை மட்டும் இஸ்லாமியர்கள் விளக்கினால் போதாது, இது போல இருக்கும் இன்னும் அனேக குழம்ப்பம் தரும் குர்‍ஆனின் தவறுகள், மற்றும் முரண்பாடுகளை அவர்கள் விளக்கவேண்டும், அதாவது அனேக கதைகளில் குர்‍ஆன் செய்த குழப்பம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் எந்த ஒரு மத கோட்பாட்டையும் மாற்றிவிடப்போவதில்லை, அதாவது "இரண்டு பெண்கள்" என்ற வார்த்தையை "ஏழு பெண்கள்" என்று ஒரு யூதன் மாற்றுவதினால், மார்க்க ரீதியாக என்ன பயன் உண்டாகப்போகிறது? எந்த ஒரு பயனும் இல்லை, ஆகவே, இது மாற்றமடைந்த ஒன்று அல்ல, இது குர்‍ஆனின் குழப்பமாகும்.

நேரடியாக ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆனின் இந்த குழப்பத்திற்கு காரணம் முந்தைய வேதங்கள் பற்றிய அறிவு முஹம்மதுவிற்கு சரியான முறையில் இல்லாமல் இருந்தது தான். இந்த ஆய்வின் மூலமாக நாம் அறிவது இது தான், இயற்கையாகவே முஹம்மது அதிகமாக குழம்பியுள்ளார். எந்த ஒரு இஸ்லாமியரும், இது வரை தங்கள் குர்‍ஆன் இறைவனின் வேதம் என்று நிருபிக்க, இப்படிப்பட்ட முரண்பாட்டுக்கு சரியான முறையில் பதில் சொல்லி, குர்‍ஆனை காப்பாற்றிக்கொள்ளவில்லை




taken from .http://www.answering-islam.org/

சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)

எப்படி ஒரு சிறிய புழு சாலொமோனுடைய முழு தடியையும் தின்றுவிட்டது? அந்த புழு தடியை முழுவதும் திண்ணும் வரை பல மாதங்கள் சாலமோன் அப்படியே விழாமல் நின்றுக்கொண்டு இருந்தாரா?
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக்கொடுத்ததுஅது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழுவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்கமாட்டோமே” என்பதை ஜின்கள் விளங்கிக்கொண்டன. (குர்-ஆன் 34:14) (பீஜே தமிழாக்கம்)
சாலொமோன் எறும்புகள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் (குர்-ஆன் 27:19). தன்னைச் சுற்றியுள்ள புழூ பூச்சிகளின் பேச்சுக்களை தொடர்ந்து எப்போதும் கேட்டுக்கொண்டு எப்படி அவரால் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்கமுடிந்தது? தன் காதுகளால் தொடர்ந்து இந்த சத்தங்களை கேட்டு அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருப்பார்.
27:17. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

27:18. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது”என்று ஓர் எறும்பு கூறியது .

27:19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!" என்றார். (குர்-ஆன் 27:17-19)
 
ஆனால், எறும்புகள் மனிதர்கள் பற்றி இப்படி நினைக்கின்றன என்றுச் சொல்வதை யார் நம்புவார்கள்? நான் எறும்புகள் மீது காலை வைக்கும் போது அவைகள் ஓடி ஒளிந்துக் கொள்வதை நான் காணவில்லை. நாம் அவர்கள் மீது கால்களை வைத்து மிதித்தால், அவைகள் மரித்துவிடுவார்கள் என்று எறும்புகள் அறிந்திருந்தால், ஏன் அவைகள் சீக்கிரமாக ஓடி மறைந்து ஒளிவதில்லை?
சாலொமோனுக்கு பறவைகளிலும், ஜின்களிலும் படைகள் இருந்தன என்று குர்-ஆன் கூறுகிறது (27:17). இதிலும் மேலும் ஆச்சரியப்படும் விவரம் என்னவென்றால், ஒரு புழுக்கொத்தி பறவை சாலொமோனுடன் செய்த நீண்ட உரையாடலாகும். இதனை நாம் குர்-ஆன் 27:20-28 வரையுள்ள வசனங்களில் காணலாம். இது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒன்றாக காணப்படுகின்றது.
27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். "ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா ? என்றார்.

27:21. "அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்" (என்றும் கூறினார்).

27:22. (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் " என்று கூறியது.

27:23. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது"

27:24. "அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள்" (என்றும் கூறியது.)

27:25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.

27:26. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி.

27:27. "நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்'' என்று அவர் கூறினார்.

27:28. "எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!" (என்றும் கூறினார்).
குர்-ஆனின் படி, சாலொமோன் இந்த பறவையை ஷேபா அரசியிடம் அனுப்புகிறார். அந்த அரசி வந்து அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறார், மற்றும் இதர கேள்விகளையும் கேட்கிறார்.
இந்த ஷேபா அரசியைப் பற்றி பைபிள் வேறு வகையான விவரங்களைத் தருகிறது. அதாவது இந்த இராணி, சாலொமோனின் ஞானம் மற்றும் இதர சாதனைகளை பற்றி கேள்விப்பட்டு, அவரை சோதிக்கும் படி வருகிறார். பல கடினமான கேள்விகளை சாலொமோனிடம் கேட்டு அவர் கொடுத்த பதில்களால் ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலின் தேவனை புகழ்ந்து பேசுகிறாள். குர்-ஆன் சொல்வது போல, சாலொமோன் ஷேபா இராணியை “மிரட்டவில்லை”, அதற்கு பதிலாக அந்த இராணி சாலொமோனின் ஞானத்தைப் பற்றி ஆச்சரியப்பட்டு, தேவன் அவருக்கு கொடுத்திருந்த ஆசீர்வாதங்களை கண்டதினால், ஆச்சரியப்பட்டு தேவனை புகழுகிறாள் (1 இராஜாக்கள் 10:9). 





Taken from  http://www.answering-islam.org/