Total Pageviews

Thursday, 23 October 2014

குழம்பி போகும் கிறிஸ்தவர்கள் இதை பார்க்கவும்

பீஜே அவர்கள் கூறுவது:

1) இயேசு போதித்ததற்கு எதிராக பவுல் போதித்தார், இதனையே கிறிஸ்தவ மார்க்கமாக்கி விட்டார்.

2) இதற்கு ஆதாரம் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகமாகும்.

3) அப். நடபடிகள் முதல், கடைசி வரை படித்தால் இதனை புரிந்துக்கொள்ளலாம்
இது தான் பீஜே அவர்கள் வரிகளின் சுருக்கம்.

பீஜே அவர்களின் இந்த விமர்சனத்திற்கு நான் இரண்டே வரிகளில் பதில் தரமுடியும், அதாவது இதற்கான பதில் "பீஜே அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை படிக்கவில்லை, அல்லது படித்து புரிந்துக்கொண்டாலும், தங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை நிலை நாட்டுவதற்கு இப்படிப்பட்ட பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்" என்பதாகும்.

பீஜே அவர்கள் கூறுகிறார், பவுல் தான் இயேசுவின் போதனைகளை மாற்றிவிட்டாராம், இதனை அப்போஸ்தலர் நடபடிகள் ஆரம்பமுதல் கடைசி வரை படித்தால் தெரிந்துக் கொள்ளலாமாம். பீஜே அவர்கள் கூறியதைக் கேட்டு, எந்த இஸ்லாமியராவது அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால், முதல் சில அதிகாரங்களை படிக்கும் போதே தெரிந்துக்கொள்ளலாம், பீஜே அவர்கள் சொன்னது "மிகப்பெரிய பொய்" என்பதை.

ஏன் இப்படி இஸ்லாமிய அறிஞர்கள் பொய்களை பயமில்லாமல் கூறுகிறார்கள்?

ஏன் இவர்கள் அறைகுறையாக மற்றவர்களின் வேதங்களை படித்து பொருள் கூறுகிறார்கள்?

முதலாவதாக இதற்கு காரணம், சராசரி இஸ்லாமியர்கள் இவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள், என்ற பயமின்மையாகும். இதில் சராசரி இஸ்லாமியரின் சுயநலமும் உள்ளது, இஸ்லாமின் பெயர் உயருவதற்கு, யார் எந்த பொய்யைச் சொன்னால் என்ன, இஸ்லாமுக்கு உபயோகமாக இருக்குமா? அது போதும் என்ற இஸ்லாமிய மனநிலை.

இரண்டாவதாக, நமக்கு எதற்கு வம்பு, பொய் சொல்வருக்கு தேவன் தண்டனையைக் கொடுப்பார் என்றுச் சொல்லி நழுவி விடும் சராசரி கிறிஸ்தவர்களே ஆவார்கள்.

இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் மீது பொய்களை சொல்லும் போது, இயேசு சாட்டையை உண்டாக்கி, எருசலேம் ஆலயத்தை வியாபார இடமாக மாற்றியவர்களை துரத்தினாரே, அதுபோல செய்ய கிறிஸ்தவர்கள் (பதிலைக் கொடுக்க) தவறியதே இதற்கு இன்னொரு காரணம்.

ஆனால், இனி இஸ்லாமியர்களின் இந்த பொய் அதிக நாட்கள் நிலைத்து இருக்க வாய்ப்பு குறைவு.

இப்போது, அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் முதல் சில அதிகாரங்கள், அதாவது பவுலை இயேசு சந்திப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்ச்சிகள் எப்படி இஸ்லாமுடைய முகத்தில் அல்லது இஸ்லாமியர்களின் பொய்யான கோட்பாட்டின் முகத்தில் கரியை பூசுகின்றது என்பதைக் காண்போம்.

அப்போஸ்தலருடைய நடபடிகளின் முதல் எட்டு அதிகாரங்களின் சுருக்கம்:
1. உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்கு காணப்படல், மற்றும் பரமேறுதல் (1:4-11)

2. தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவருக்காக சீடர்கள் எருசலேமில் காத்திருத்தல் (1:12-14)
எருசலேம் சபையின் ஆரம்பகால விசுவாசிகளின் நடபடிகள் (1:15 - 8:3)
1) யூதாசுக்கு பதிலாக மத்தியாஸை நியமித்தல் (1:15-26)

2) பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வருகை (2: 1-13)

3) எருசலேமில் பேதுருவின் முதல் பிரசங்கம், அனேகர் மனந்திரும்பினர்(2:14-41)

4) பேதுரு மற்றும் யோவான், ஒரு முடவனை சுகமாக்குதல் (3:1-10)

5) அற்புதத்திற்கு பிறகு பேதுரு செய்த இரண்டாம் பிரசங்கம் (3:11-26)

6) பேதுரு மற்றும் யோவானின் கைது, நீதிமன்றத்திற்கு முன்பு சாட்சி கொடுத்தல் (4:1-22)

7) பேதுரு யோவானின் விடுதலை, விசுவாசிகளின் கூட்டு ஜெபம் (4:23-31)

8) அப்போஸ்தலர்களின் அற்புதங்கள், சுகமாக்குதல் (5:12-16)

9) மறுபடியும் அப்போஸ்தலர்கள் கைது செய்யப்படல், நீதிமன்றத்திற்குமுன்பு சாட்சியிடல் ( 5:17-42)

10) ஸ்தேவான் கைது செய்யப்படல், பயமில்லாமல் அவர் செய்த பிரசங்கம்( 6:8 - 7:53)

11) ஸ்தேவான் கல்லெறியப்பட்டு கொல்லப்படல், தன்னை கொன்றவர்களுக்காக வேண்டிக்கொள்ளுதல் (7:54 - 60)

12) சவுல் சபையை துன்புறுத்த ஆரம்பித்தல் (8:1-3)
பீஜே அவர்கள் அப். நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களை படித்தாரா?
பீஜே அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் ஏழு அதிகாரங்களை படித்தாரா இல்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது. இந்த ஏழு அதிகாரங்களில் இயேசுவின் இறைத்தன்மை சீடர்களால் (பவுலினால் அல்ல) வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவின் உள்வட்ட சீடர்களாகிய பேதுருவும், யோவானும் யாக்கோபும், எருசலேமின் சபையின் முக்கிய தலைவர்களாக செயல்படுகிறார்கள். பேதுரு தனது முதல் பிரசங்கத்திலும், இரண்டாம் பிரசங்கத்திலும், இன்னும் அவர் யூதர்களின் நீதி மன்றத்தில் பகிர்ந்துக்கொண்ட சாட்சியிலும், இயேசுவின் இறைத்தன்மையைக் குறித்து பேசி இருக்கிறார். ஸ்தேவான் தான் மரணிப்பதற்கு முன்பு இயேசுவின் இறைத்தன்மையை குறித்து சொன்னார். இவைகள் எல்லாம், பவுல் கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்பாகவே நடந்துள்ளது. இது பீஜே அவர்களுக்கும், அவரது வார்த்தைகளை புடமிடாமல் அப்படியே தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டும், இதர இஸ்லாமியர்களுக்கும் புரியவில்லையா?

மேலேகண்ட ஒவ்வொரு விவரத்தின் வசனங்களைக் காட்டி நான் அதிகமாக விளக்கமுடியும், பீஜே அவர்கள் இந்த கட்டுரையைக் குறித்து ஏதாவது எழுதினால், அவைகளை நான் விளக்கி தனி கட்டுரையாக எழுதுவேன். மேலோட்டமாக இந்த ஏழு அதிகாரங்களை படித்தாலே பீஜே அவர்கள் சொன்னது "பொய்" என்பது தெள்ளத்தெளிவாக புரியும். 


this post taken from http://isakoran.blogspot.in/ only

No comments:

Post a Comment